[player id=435]

Amaranantha

Guru Amaranantha

நீங்கள் ஏதோ ஒன்றை (இறை மார்க்கத்தை) உணரத்துடிப்பதற்கு காரணம் ; நீங்கள் இன்னும்  உடலாயிருக்கும் புரிதலால்தான்..

வெறுமையை ஆழ்ந்து உள்வாங்கிக் கொள்ளுங்கள். நீங்கள் எந்த அடையாளத்திலும் சிக்காத தருணமே, “முக்தி”

*”இறையைத் தேடாதே ; இறையாக மாறு”*

ஞானமும் முக்தியும் காணத் தெரியாது, தேடக் கிடைக்காது.. கடவுளைத் தேடுகிற போது வெளியே தெரிகிறான்,

நிறுத்துங்கள்,

அவன் உள்ளிருந்து யாதுமாகி கிடக்கிறான். இங்கே படைத்தல் என்று தனியாக ஏதுமில்லை.. அனைத்தும் சுழற்சியின் வெளிப்பாடு இங்கே பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை,

அனைத்தும் வெறும் புரிதலின் சூழ்ச்சி மட்டுமே. மாயையைத்தான் உலகம் அறிவு என அழைக்கிறது. நீங்கள் யார் போலவோ ஞானமடைய விரும்பி, உங்களைப்போல் வெளிப்பட தவறி விடாதீர்கள்.. நீங்கள் யார் யார் என்பதற்கு சாட்சியாகவே யாம் வந்தோம்

உங்களுக்கானதே நீங்கள், அதை மறவாதீர்கள்…

எனது பூரண நல்லாசிகள்,

*”குரு அமரானந்த  ஹம்சா”*